Monday 30 April 2018

கணினி மயமாகும் பாடங்கள்

9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பாடத்திட்டமும் கணினிமயமாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படுவதாக அறிவித்த நிலையில் , தற்போது  1,6,9 மற்றும் 11 ஆகிய வகுப்பு மாணவா்களுக்கான புதிய பாடத்திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி அவா்களால் நாளை மறுநாள் வெளியிடும் என்று தற்போது அறிவித்துள்ளனா்.

முதல்கட்டமாக, 1 மற்றும் 9-ம் வகுப்புக்கான தமிழ், ஆங்கில பாடங்கள் அடங்கிய பாடநூல்களின் முதல் பாகம் முழுமையாக முடிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அனைத்து பாடமும் முடிக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது என்று அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்துள்ளாா். 

பாடத்திட்டத்தின் புத்தக வடிவமைப்பினை சிறப்பான முறையில் உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.  பின்னா்  விலை உயர்ந்த காகிதத்தில் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் பாடப்புத்தகத்தை மாணவர்கள் சுமந்து செல்லக்கூடாது என்ற வகையில் 3 கட்டங்களாகவும் பிரித்து வைத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயா்நிலை படிக்கும் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பாடத்திட்டமும் கணினிமயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம்  கல்வியில் சிறந்து விளங்கும் முதன்மையான மாநிலமாக திகழும் என்று கூறினாா்.

Saturday 28 April 2018

எட்டாம் வகுப்பு வரை இனி ஆன்லைன் தேர்வு

8-ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறை : பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி


 8ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வித்துறையில் வரும் கல்வி ஆண்டில் முதல் வகுப்பு, 6ம் வகுப்பு, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இவற்றில் பிளஸ் 1 தவிர மற்ற வகுப்புகளுக்கு முதல் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, மாவட்டவாரியாக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு அன்றைய தினமே பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

இப்புதிய முயற்சியை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை புதிய பாடத்திட்டங்களை வடிவமைத்தக்குழுவே தயாரித்து வழங்கியுள்ளது. அதன்படி ஆன்லைன் தேர்வுமுறைக்கு ஏற்ப புதிய பாடப்புத்தகங்களில் கேள்விகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வரும் கல்வி ஆண்டில் முதல்கட்டமாக 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

அதற்கேற்ப தமிழக அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் முழுமையாக தொடங்கிய பின்னர் தொடக்கப்பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் தேர்வுமுறை நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Friday 27 April 2018

ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் அறிவிப்பு

ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவு மத்திய தேர்வாணையம் வெளியீடு


ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகளை மத்திய தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 13 ஆயிரம் பேரில் 2,567 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

நேர்முகத் தேர்வில் பங்கேற்ற 2,567 பேரில் 990 பேர் ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 2017 க்கான யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் www.upsc.gov.in என்ற முகவரியில் காணலாம்.

தமிழகத்தில் இலவச ஐஏஎஸ் அகாடமி

தமிழகம் முழுவதும் அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமிகள் இன்னும் 2 மாதங்களில் தொடங்கப்படும்:

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமிகள் இன்னும் 2 மாதங்களில் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் சார்பில் நூலகங்கள் மற்றும் வாசகர்கள் வட்ட தலைவர்கள் கருத்தரங்கு மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தமிழக மாணவர்களின் நலனை மனதில் கொண்டு ஐஏஎஸ் அகாடமிகள் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் விடுமுறை தினங்களில் வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

புதிய பாடத்திட்ட பொருண்மை அறிவோம்

புதிய பாடத்திட்டத்தில் பொருண்மைகளின் தொடர்ச்சி.... முன் எப்போதும் இல்லாத அளவில் .... மாறுபட்ட சிந்தனை...                   செய்யுள், உரைநடை,...